இடுகைகள்

பிப்ரவரி, 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மியான்மாரை கேள்விக்குட்படுத்தும் திமோர்-லெஸ்டே

படம்
  மியான்மாரை கேள்விக்குட்படுத்தும் திமோர்-லெஸ்டே நான்கு மாதங்களுக்கு முன்புதான், திமோர்-லெஸ்டே தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கத்தில் (ASEAN) முறையாக உறுப்பினரானது. கடந்த வாரம், இந்த சிறிய நாடு முக்கியமான ஒரு நடவடிக்கையை எடுத்தது: போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக மியான்மர் இராணுவத்தின் பொறுப்புக்கூறலை ஆராய அதன் நீதித்துறை அதிகாரிகள் ஒரு வழக்கறிஞரை நியமித்தனர். ஒரு ASEAN நாடு மற்றொரு ASEAN உறுப்பினருக்கு எதிராக இதுபோன்ற நடவடிக்கையை எடுத்தது இதுவே முதல் முறை என்று நம்பப்படுகிறது. மியான்மரில் சிறுபான்மையினரான சின் மக்களுக்கு நீதி வழங்குவதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவான குழுவான சின் மனித உரிமைகள் அமைப்பு தொடர்ந்து முயற்சித்ததன் விளைவாக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. புகாரை சமர்ப்பித்ததில், அமைப்பின் தலைவர் நீதி மற்றும் சுதந்திரத்தைப் பெறுவதற்கான திமோர்-லெஸ்டேவின் சொந்த வரலாற்று முயற்சிகளுக்கு ஆதரவை வெளிப்படுத்தினார். இப்போது திமோர்-லெஸ்டே அதிகாரிகள், மியான்மார் இராணுவ ஆட்சிக்குழுத் தலைவர் மின் ஆங் ஹ்லைங் உட்பட மியான்மரின் இராணுவத் தலைவர்கள் மீது குற்...

பராகுவேவில் என்ன நடந்தது?

படம்
 பராகுவேவில் என்ன நடந்தது?            புகைப்படம் : Britannica பராகுவேவின் இன்றைய சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் நெருக்கடிகள் பெரும்பாலும் ஆல்ஃப்ரெடோ ஸ்ட்ரோஸ்னர் (1954–1989) என்ற இராணுவ ஆட்சிக்காலத்தின் விளைவுகளாகும். ஸ்ட்ரோஸ்னர் ஆட்சிக்காலத்தில் அரசு ஏழை விவசாயிகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்த மில்லியன் கணக்கான ஹெக்டேயர் அரச நிலங்களை, அரசியல் மற்றும் இராணுவ ஆதரவாளர்களுக்கு வழங்கியது. விவசாய சீர்திருத்தத்திற்காக இருந்த சுமார் 8 மில்லியன் ஹெக்டேயர் நிலம் தனியாரிடம் சென்றது. இதனால் பெரும் நில எஸ்டேட்கள் உருவாகி, விவசாயிகள் மற்றும் பூர்வீக மக்கள் நிலமற்றவர்கள் ஆனார்கள். இன்று அந்நாட்டில் 2% நில உரிமையாளர்கள் 80% விவசாய நிலத்தை கட்டுப்படுத்துகிறார்கள். இதன் விளைவாக ஆயிரக்கணக்கான விவசாய மற்றும் பூர்வீக குடும்பங்கள் தங்கள் நிலங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர். பலர் நகரங்களுக்கு அல்லது வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்தனர். கிராம சமூகங்கள் சிதைந்தன. பாரம்பரிய விவசாயம் குறைந்தது. வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் ஏற்றுமதிக்கும் அட்லாண்டிக் காடு மற்றும் பராகுவே சாகோ போன...

ஆஸ்திரேலியாவில் இஸ்ரேல் அதிபருக்கு எதிரான போராட்டங்கள் – விளக்கம்

படம்
ஆஸ்திரேலியாவில் இஸ்ரேல் அதிபருக்கு எதிரான போராட்டங்கள் – விளக்கம் புகைப்படம்: Al Jazeera 2026 பிப்ரவரி மாதத்தில், இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் ஆஸ்திரேலியாவுக்கு அதிகாரப்பூர்வமாக வந்ததைத் தொடர்ந்து, நாட்டின் பல நகரங்களில் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றன. இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக், ஆஸ்திரேலிய பிரதமர் ஆந்தனி அல்பனீஸ் அவர்களின் அழைப்பின் பேரில் ஆஸ்திரேலியாவுக்கு வந்தார். இந்த விஜயத்தின் நோக்கம் 2025 டிசம்பர் மாதம் சிட்னியின் பாண்டி பீச்சில் நடந்த யூத ஹனுக்கா நிகழ்வில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் உயிரிழந்ததை நினைவுகூர்வதற்காகவும் ஆஸ்திரேலியாவிலுள்ள யூத சமூகத்துக்கு ஆதரவு மற்றும் ஒற்றுமையை வெளிப்படுத்துவதற்காகவும் அங்கே வந்தார் என அந்நாட்டு அரசு கூறுகிறது. ஆஸ்திரேலிய அரசு, இந்த வருகை தீவிரவாதத்துக்கு எதிரான ஒன்றுபட்ட நிலைப்பாட்டின் அடையாளம் என தெரிவித்துள்ள நிலையில்   மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவரை அங்கே கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர் இந்த வருகைக்கு எதிராக, பாலஸ்தீன ஆதரவு அமைப்புகள் மற்றும் மனித உரிமை குழுக்கள் நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தின. காச...