பராகுவேவில் என்ன நடந்தது?
பராகுவேவில் என்ன நடந்தது?
![]() | |
| புகைப்படம் : Britannica |
பராகுவேவின் இன்றைய சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் நெருக்கடிகள் பெரும்பாலும் ஆல்ஃப்ரெடோ ஸ்ட்ரோஸ்னர் (1954–1989) என்ற இராணுவ ஆட்சிக்காலத்தின் விளைவுகளாகும்.
ஸ்ட்ரோஸ்னர் ஆட்சிக்காலத்தில் அரசு ஏழை விவசாயிகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்த மில்லியன் கணக்கான ஹெக்டேயர் அரச நிலங்களை, அரசியல் மற்றும் இராணுவ ஆதரவாளர்களுக்கு வழங்கியது. விவசாய சீர்திருத்தத்திற்காக இருந்த சுமார் 8 மில்லியன் ஹெக்டேயர் நிலம் தனியாரிடம் சென்றது. இதனால் பெரும் நில எஸ்டேட்கள் உருவாகி, விவசாயிகள் மற்றும் பூர்வீக மக்கள் நிலமற்றவர்கள் ஆனார்கள். இன்று அந்நாட்டில் 2% நில உரிமையாளர்கள் 80% விவசாய நிலத்தை கட்டுப்படுத்துகிறார்கள்.
இதன் விளைவாக ஆயிரக்கணக்கான விவசாய மற்றும் பூர்வீக குடும்பங்கள் தங்கள் நிலங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர். பலர் நகரங்களுக்கு அல்லது வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்தனர். கிராம சமூகங்கள் சிதைந்தன. பாரம்பரிய விவசாயம் குறைந்தது.
வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் ஏற்றுமதிக்கும் அட்லாண்டிக் காடு மற்றும் பராகுவே சாகோ போன்ற காடுகள் பெருமளவில் அழிக்கப்பட்டன. சோயா பயிர்செய்கை மற்றும் மாட்டுப் பண்ணைகள் இயற்கை சூழலை மாற்றின. இதனால் உயிரியல் பண்முகத்தன்மை குறைந்தது, நீர்வளங்கள் அழிக்கப்பட்டன மற்றும் காலநிலை சமநிலை பாதிக்கப்பட்டன.
அரசு பெரிய நில உரிமையாளர்கள் மற்றும் பாரியளவிலான வேளாண் தொழில்களை பாதுகாத்தது. தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய இயக்கங்கள், மூலமான அரசியல் எதிர்ப்புகளை அடக்கியது. 'பொருளாதார வளர்ச்சி' என்பது சிறிய எண்ணிக்கையிலான உயர்மட்ட மக்களுக்கு மட்டுமே பயன் அளித்தது.
1989க்கு பிறகும் இந்நாட்டில் நில அபகரிப்பு தொடர்கிறது. நிலப் பிரச்சினைகள் காரணமாக சமூக மோதல்கள் நடைபெறுகின்றன. கிராமப்புற வறுமை மற்றும் உணவு பாதுகாப்பின்மை நீடிக்கின்றன.
அரசியல் ஆட்சி அடக்குமுறை, சமூக சமத்துவமின்மை மற்றும் இயற்கை அழிவு ஆகியவற்றுக்கிடையில் ஒரு கட்டமைப்பு தொடர்பை பராகுவே நாடு எமக்கு விளக்குகிறது.

கருத்துகள்
கருத்துரையிடுக