ஆஸ்திரேலியாவில் இஸ்ரேல் அதிபருக்கு எதிரான போராட்டங்கள் – விளக்கம்
ஆஸ்திரேலியாவில் இஸ்ரேல் அதிபருக்கு எதிரான போராட்டங்கள் – விளக்கம்
![]() |
| புகைப்படம்: Al Jazeera |
இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக், ஆஸ்திரேலிய பிரதமர் ஆந்தனி அல்பனீஸ் அவர்களின் அழைப்பின் பேரில் ஆஸ்திரேலியாவுக்கு வந்தார். இந்த விஜயத்தின் நோக்கம் 2025 டிசம்பர் மாதம் சிட்னியின் பாண்டி பீச்சில் நடந்த யூத ஹனுக்கா நிகழ்வில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் உயிரிழந்ததை நினைவுகூர்வதற்காகவும் ஆஸ்திரேலியாவிலுள்ள யூத சமூகத்துக்கு ஆதரவு மற்றும் ஒற்றுமையை வெளிப்படுத்துவதற்காகவும் அங்கே வந்தார் என அந்நாட்டு அரசு கூறுகிறது. ஆஸ்திரேலிய அரசு, இந்த வருகை தீவிரவாதத்துக்கு எதிரான ஒன்றுபட்ட நிலைப்பாட்டின் அடையாளம் என தெரிவித்துள்ள நிலையில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவரை அங்கே கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்
இந்த வருகைக்கு எதிராக, பாலஸ்தீன ஆதரவு அமைப்புகள் மற்றும் மனித உரிமை குழுக்கள் நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தின. காசாவில் இஸ்ரேல் மேற்கொள்ளும் இராணுவ தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என போராட்டக்காரர்கள் முழக்கமிட்டனர். பலர் இதை பொதுமக்கள் மீது நடைபெறும் மனித உரிமை மீறலாகவும், இன அழிப்பாகவும் குற்றம்சாட்டினர்.
இஸ்ரேல் அரசாங்கத்தின் கொள்கைகளை ஆதரிப்பதுபோல் ஹெர்சாக் வருகை இருக்கிறது என்று அவர்கள் கூறினர்.
பாலஸ்தீன மக்களுக்கு நீதி மற்றும் பொறுப்புணர்வு வேண்டும் என்றும், இஸ்ரேல் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். போராட்டக்காரர்கள் பாலஸ்தீனக் கொடிகள், பதாகைகள் ஏந்தி, முக்கிய அரசு கட்டிடங்கள் மற்றும் பொது இடங்களில் திரண்டனர்.
சில நகரங்களில் போராட்டங்கள் வன்முறையாக மாறின. சிட்னியில், காவல்துறை போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த மிளகாய் ஸ்ப்ரே பயன்படுத்தி, 27 பேரை கைது செய்தது. தடையிடப்பட்ட பகுதிகளில் நுழைய முயன்றவர்களை காவல்துறை தடுத்து நிறுத்தியது. மனித உரிமை அமைப்புகள், காவல்துறை அதிக வன்முறை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டின. அம்னஸ்டி இன்டர்நேசனல் ஆஸ்திரேலியா, இந்த சம்பவங்களை விசாரிக்க சுயாதீன விசாரணை வேண்டும் எனக் கோரியது.
இந்த போராட்டங்கள், ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டு கொள்கை, மனித உரிமைகள் மற்றும் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் குறித்து பெரிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.

கருத்துகள்
கருத்துரையிடுக