காணி அமைச்சரவையின் செயலாளரிடமிருந்து ஓர் சட்ட விரோத சுற்றறிக்கை

காணி அமைச்சரவையின் செயலாளரிடமிருந்து
ஓர் சட்ட விரோத சுற்றறிக்கை

சூழலியளாலர் சஜீவ ஷாமிகர எழுதிய பதிவின் தமிழாக்கம்

காணி அமைச்சர், ஆர்.கே. ரணவக்க அவர்களால் அனைத்து மாவட்டச் செயலாளரகள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு 'அரசு காணிகளை அளவிட்டு ஆவணப்படுத்தல் என்ற தலைப்பில் ஓர் சுற்றறிக்கை 2021ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 6ம் திகதி 02/2021 என இலக்கமிடப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.  


இந்த சுற்றறிக்கை மூலம் நில மேம்பாட்டு சட்டத்தின் 8ம் பிரிவின் கீழ் நில ஆணையாளருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரங்களுக்கு ஏற்ப மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு அரசுக்கு சொந்தமான நிலப்பரப்புகளை அளவிட்டு ஆவணப்படுத்துமாறு பணிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த காணிகள் தற்போதைய பல்வேறு விதமான அபிவிருத்திப்பணிகளுக்கும், கிராமங்களை விரிவாக்கம் செய்வதற்கும் மற்றும் எதிர்கால அபிவிருத்தி செயற்திட்டங்களுக்காகவும் பயன்படுத்திக் கொள்ளப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த சுற்றறிக்கையில் குறிப்பாக குறிப்பிடப்பட்டுள்ளது யாதெனில், வன பாதுகாப்பு அமைச்சகத்தின், செயலாளரால் 2020 நவம்பர் மாதம் 04ம் திகதி வெளியிடப்பட்ட MWFC/01/2020  என இலக்கமிடப்பட்ட சுற்றறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டதன் படி அதற்கு முந்தைய சுற்றறிக்கைகளான  1998.07.01 அன்று வெளியிடப்பட்ட 05/98 என இலக்கமிடப்பட்ட சுற்றறிக்கை, 2001.08.10 அன்று வெளியிடப்பட்ட 5/2001  என இலக்கமிடப்பட்ட சுற்றறிக்கை மற்றும் 2006.05.17 அன்று வெளியிடப்பட்ட 02/2006 என இலக்கமிடப்பட்ட சுற்றறிக்கை ஆகிய மூன்றும் இரத்து செய்யப்படுவதால், வனப்பாதுகாப்பு மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு ஆணையாளரால் தற்போது வனவிலங்குகள் வாழும் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டு பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் வனப்பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய அரசுக்கு சொந்தமான காணிகளை அளவிட்டு மாவட்டச் செயலாளரகள் மற்றும் பிரதேச செயலாளர்களின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வருமாறு பணிக்கப்பட்டுள்ளது.


சுற்றறிக்கையில் உள்ள பிழைகள்

இந்த சுற்றறிக்கையை ஆய்வு செய்யும் போது, இதில் பிழையான விடயங்கள் பல உள்ளடங்கியுள்ளதாக தெறிகிறது. வனப்பாதுகாப்பு மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு ஆணையாளரால் வனவிலங்குகள் வாழும் பகுதிகள் அடையாளம் காணப்பட 2009ஆம் ஆண்டு 65ஆம் இலக்க சட்டமூலம், 1907ஆம் ஆண்டு 16 ஆம் இலக்க சட்டமூலம், 2009ஆம் ஆண்டு 22 ஆம் இலக்க சட்டமூலம், மற்றும் 1937ஆம் ஆண்டு 02 ஆம் இலக்க சட்டமூலம் ஆகியன பயன்படுத்திக்கொள்ளப்பட்டன. இவை அத்துறைக்கு பொருப்பான அமைச்சரால் முடிவு செய்யப்பட்டு பிரகடனப்படுத்தப்பட்ட இடங்களாகும். ஆகவே இவற்றை முற்றிலுமாக வனப்பாதுகாப்பு மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு ஆணையாளர்;கள் தெறிவு செய்த இடங்களாக கணக்கிட முடியாது. அந்த வகையில் இதில் அடங்கியுள்ள தரவுகளில் பிழைகள் அதிகம் உள்ளன.


வன பாதுகாப்பு சட்டமூலத்தை மீறல்

இந்த சுற்றறிக்கையின் முக்கிய சட்ட விரோத தன்மையானது, வன பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்ட வனப்பகுதிக்கு புறம்பான காணிகளை அபிவிருத்தி வேலைகள், கிராமங்கள் விரிவாக்கம் செய்ய மற்றும் எதிர்கால அபிவிருத்திக்கு பயன்படுத்திக் கொள்ள  பிரதேச செயலாளர் மற்றும் மாவட்டச் செயலாளர்களுக்கு உத்தரவு வழங்கியுள்ளதாகும்.  இது வன பாதுகாப்பு சட்டத்தை முழுமையாக மீறுவதாகும். வன பாதுகாப்பு சட்டத்தின்  20வது பிரிவுக்கு ஏற்ப பாதுகாக்கப்படும் வனங்கள் மற்றும் கிராமப்புற வனங்கள் என கூறப்படும்  வன பகுதியை தவிர ஏனைய அரசிற்கு சொந்தமான காணிகளில் உள்ள வனங்களும் இந்த பிரிவின் கீழ் அடங்கும், ஆனால் இவை கேசட் மூலம் அறிக்கைப்படுத்தப்படவில்லை. 

சுற்றறிக்கையின் 20 (1) பிரிவுக்கு ஏற்ப அரசுக்குச் சொந்தமான வனத்தில் மரங்களை வெட்டுதல், அகழ்தல், தீ வைத்தல், வனத்தை சுத்தம் செய்து பயிரிடுதல், நிலையான அல்லது தற்காலிக கட்டுமானங்களை அமைத்தல், பாதைகளை உருவாக்குதல், எல்லை குறியீடுகளை மாற்றுவது ஆகிய அனைத்து சட்டத்துக்கு எதிராக நடவடிக்கைகளாகும். இத்தகைய  சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு நீதிமன்றத்தால் அதிகப்படியாக குற்றவாளி ஒருவருக்கு ரூபாய் 5000 தொடக்கம் 50,000 வரை தண்டப்பணம் அல்லது 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இந்த இரு தண்டனைகளுக்கும் உள்ளடக்கப்படுவார்கள். இதற்கு மேலதிகமாக காடுகளுக்கு செய்யும் சேதத்திற்கு நீதிமன்றத்தால் நியமிக்கப்படும் தண்டப்பணத்தையும் செலுத்த வேண்டிவரும். 20(2)(1)  பிரிவுக்கு ஏற்ப செய்யப்படும் பாதிப்புக்கு  பண உதவி செய்பவர்கள் மற்றும் வேறு உதவிகளை செய்பவர்களுக்கும் நீதிமன்ற தண்டனை வழங்கப்படக்கூடும்.

05/98 மற்றும் 05/2001 இலக்கங்களை உடைய சுற்றறிக்கைகள்; MWFC/ 01/2020 இலக்கத்தை உடைய சுற்றறிக்கை  மூலம்  இரத்துசெய்யப்பட்டாலும் 2009 இல 65 எனும் சட்டத்தின் மூலம் வன பாதுகாப்பு சட்டத்தை இறுதியாக மாற்றியமைக்கும்போது இச்சட்டத்தற்கு கீழுள்ள வனங்களை வேறு எந்த நிறுவனத்துக்கோ கையளிப்பது தடை செய்யப்ப்டுள்ளது. அந்தச் செயல்பாட்டைச் செய்வதன் மூலம், வன பாதுகாப்பு சட்டத்தை மீறுவது மட்டுமல்லாமல் அரசுக்கு சொந்தமான காடுகளை அழிவுக்கு இட்டு செல்லும் ஓர் சட்ட விரோத சுற்றறிக்கையாகவே இது அமைகிறது.

 

Comments

Popular posts from this blog

சுற்றுச்சூழல் விவசாயம் மற்றும் தேனீ வளர்ப்பு

Gal Oya Development Project in Sri Lanka