Posts

Showing posts from September, 2021

காணி அமைச்சரவையின் செயலாளரிடமிருந்து ஓர் சட்ட விரோத சுற்றறிக்கை

காணி அமைச்சரவையின் செயலாளரிடமிருந்து ஓர் சட்ட விரோத சுற்றறிக்கை சூழலியளாலர்  சஜீவ  ஷா மிகர எழுதிய பதிவின் தமிழாக்கம் காணி அமைச்சர், ஆர்.கே. ரணவக்க அவர்களால் அனைத்து மாவட்டச் செயலாளரகள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு 'அரசு காணிகளை அளவிட்டு ஆவணப்படுத்தல் என்ற தலைப்பில் ஓர் சுற்றறிக்கை 2021ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 6ம் திகதி 02/2021 என இலக்கமிடப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.   இந்த சுற்றறிக்கை மூலம் நில மேம்பாட்டு சட்டத்தின் 8ம் பிரிவின் கீழ் நில ஆணையாளருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரங்களுக்கு ஏற்ப மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு அரசுக்கு சொந்தமான நிலப்பரப்புகளை அளவிட்டு ஆவணப்படுத்துமாறு பணிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த காணிகள் தற்போதைய பல்வேறு விதமான அபிவிருத்திப்பணிகளுக்கும், கிராமங்களை விரிவாக்கம் செய்வதற்கும் மற்றும் எதிர்கால அபிவிருத்தி செயற்திட்டங்களுக்காகவும் பயன்படுத்திக் கொள்ளப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் குறிப்பாக குறிப்பிடப்பட்டுள்ளது யாதெனில், வன பாதுகாப்பு அமைச்சகத்தின், செயலாளரால் 2020 நவம்பர் மாதம் 04ம் திகதி வெளியிடப்ப

சுற்றுச்சூழல் விவசாயம் மற்றும் தேனீ வளர்ப்பு

Image
 சுற்றுச்சூழல் விவசாயம் மற்றும் தேனீ வளர்ப்பு தேனீக்கள் தாவரங்களில் பூக்கள உருவாக மிகவும் அவசியமான உயிரினங்களில் ஒன்றாகும். ஒரு தேனீ காலனி மிக குறுகிய காலத்தில், பரந்த அளவிலான சுற்றுச்சூழல் அமைப்புகளில் கூட மகரந்தச் சேர்க்கை செய்யும் திறனைக் கொண்டுள்ளது. விவசாயத்துடன் இணைந்த தேனீ வளர்ப்பு ஆரோக்கியமான விதைகளை உற்பத்தி செய்து பயிர் விளைச்சலை அதிகரிக்கும். சுற்றுச்சூழல் விவசாயத்தின் கீழ் தேனீ வளர்ப்புக்கான ஒரு வழியாக வேளாண் காடுகளை அறிமுகப்படுத்தலாம். வேளாண் வனவியல் போன்ற இயற்கை சுற்றுச்சூழல் நிலைமைகளின் கீழ் உற்பத்தி செய்யப்படும் தேனுக்கு சந்தையில் நல்ல கிராக்கி உள்ளது. மேலும், குறைந்த செலவில் தேனீ வளர்ப்பை பராமரிப்பது சிறு விவசாயியின் பொருளாதார நிலைக்கு அதிக பெறுமதியை சேர்க்கிறது. தேன் உற்பத்தியை அதிகரிப்பதற்காக, வேளாண் சுற்றுச்சூழல் அமைப்பு பின்வருமாறு நிர்வகிக்கப்படுகிறது, பல்வேறு பூக்கும் செடிகளை வளர்க்கப்படுகிறது, பூக்கும் தன்மையை மேம்படுத்துவதற்கு சூழல் மாற்றியமைக்கப்படுகிறது, வானிலை நிலைகளில் கவனம் செலுத்தப்படுகிறது மற்றும் பொருத்தமான தாவரங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. தேனீ வளர்ப