காணி அமைச்சரவையின் செயலாளரிடமிருந்து ஓர் சட்ட விரோத சுற்றறிக்கை
காணி அமைச்சரவையின் செயலாளரிடமிருந்து ஓர் சட்ட விரோத சுற்றறிக்கை சூழலியளாலர் சஜீவ ஷா மிகர எழுதிய பதிவின் தமிழாக்கம் காணி அமைச்சர், ஆர்.கே. ரணவக்க அவர்களால் அனைத்து மாவட்டச் செயலாளரகள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு 'அரசு காணிகளை அளவிட்டு ஆவணப்படுத்தல் என்ற தலைப்பில் ஓர் சுற்றறிக்கை 2021ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 6ம் திகதி 02/2021 என இலக்கமிடப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கை மூலம் நில மேம்பாட்டு சட்டத்தின் 8ம் பிரிவின் கீழ் நில ஆணையாளருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரங்களுக்கு ஏற்ப மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு அரசுக்கு சொந்தமான நிலப்பரப்புகளை அளவிட்டு ஆவணப்படுத்துமாறு பணிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த காணிகள் தற்போதைய பல்வேறு விதமான அபிவிருத்திப்பணிகளுக்கும், கிராமங்களை விரிவாக்கம் செய்வதற்கும் மற்றும் எதிர்கால அபிவிருத்தி செயற்திட்டங்களுக்காகவும் பயன்படுத்திக் கொள்ளப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் குறிப்பாக குறிப்பிடப்பட்டுள்ளது யாதெனில், வன பாதுகாப்பு அமைச்சகத்தின், செயலாளரால் 2020 நவம்பர் மாதம் 04ம் த...